Amusingly Simple » பார்வை

வாரணம் ஆயிரம்
திரைப்படங்களுக்குத் தமிழில் பெயர் வைப்பது என்பது மிகப்பெரும் சர்ச்சையாகி, பின் வரிவிலக்கு அறிவிப்பால் இப்போதெல்லாம் தயாரிப்பாளர்கள் போட்டிபோட்டுக் கொண்டு தமிழில் பெயர் வைப்பது ஒரு புறம் இருக்கட்டும். இயக்குநர் கௌத்தம் மேனன், சூர்யாவுடனான தன் அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டதிலிருதே எல்லோரும் “வாரணம் ஆயிரம்” பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். “வாரணம் என்றால் என்ன?” என்பது தான் பேச்சின் சாராம்சம். இப்படத்த்ன் தலைப்பு, “வர்ணம் என்னவோ…”, “வானரம் ஆயிரம்”, “வருணம் ஆயிரம்”, “வரணும் ஆயிரம்” என்று நண்பர்கள் நாவிலெல்லாம் பல பரிணாமங்களைப் பெற்றுக் கொண்டிருக்க, பலர் ‘வாரணம்’ என்றால் என்ன என்று தெரியாமல் திகைப்பது தெரிந்ததே. அதனால், ‘சும்மா’ – வாரணம் பற்றி ஒரு சின்ன பதிவு.

‘வாரணம்’ என்றால் யானை. ‘வாரணம் ஆயிரம்’ படத்தைப் பற்றி செய்தி வெளியிடும் போதே சில ஏடுகள், அடைப்பில், “Thousand Elephants” என்று சேர்த்தே வெளியிடுகின்றன. Hmmm…. ஒரு தமிழ்ச் சொல்லின் பொருள் ஆங்கிலத்தில் சொன்னால்தான் தெரிந்துகொள்ள முடிகிறது.

இன்னும், “வாரணம் ஆயிரம்” என்ற சொற்பிரயோகம், ஆண்டாள் அருளிய ‘நாச்சியார் திருமொழி’யில் வருகிறது. திருமால் தன்னைத் திருமணம் செய்வதுபோல் தான் கண்ட கனவை ஆண்டாள் தன் தோழியர்க்குச் சொல்கிறபோது,

“வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து

நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்

பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்

தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்”

என்கிறார். திருமால், ஆயிரம் யானைகள் சூழ்ந்து வருகிறார். அதை அறிந்ததும், ஊர் மக்கள் எல்லாம், பொன்னாலான குடங்களில் நீர் நிரப்பி வைத்து, எல்லா திசைகளிலும் தோரணங்கள் கட்டி திருமாலை வரவேற்பதாக நான் கனவு கண்டேன் தோழி என்று ஆண்டாள் சொல்கிறார்.

இந்தப் பாடல், ‘கேளடி கண்மணி’ படத்தில் இளையராஜா இசையில் இசைப்பாடலாக வந்துள்ளது. இந்தச் சுட்டியைச் சொடுக்கவும்.

இயக்குநர் கௌத்தம் மேனன் தொடர்ந்து தன் படங்களுக்கு அழகிய தமிழ்ப் பெயர்கள் வைப்பது மகிழ்ச்சி. (பெயர்கள் அவரின் சொந்தக் கற்பனை அல்ல என்றாலும் அழகாக இருக்கிறது என்று ஒத்துக்கொள்ளலாம்   அவரின் படப் பாடல்களும் விரசமில்லாமல், தூய பாடல்களாகவும், உணர்ந்து இரசிக்கும்படியும் இருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி. கௌத்தம் படங்களுக்குப் பாடல்கள் எழுதும் கவிஞர் தாமரைக்கு ஒரு “ஓ!” போடலாம்.

இன்றைய தமிழகம் பிறந்த நாள்
தமிழ்நாடு, ஆந்திர, கர்நாடக, கேரள மாநிலங்களின் சில பகுதிகள் என்று அனைத்தையும் உள்ளடக்கியிருந்த ‘மெட்ராஸ் ப்ரெஸிடென்ஸி‘, மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டு, இன்றைய தமிழ்நாட்டைக் கொண்ட ‘மெட்ராஸ் ஸ்டேட்‘ உதயமானது நவம்பர் 1, 1956-இல். மாநிலங்கள் ம்றுசீரமைப்புச் சட்டம் (States Reorganisation Act, 1956) அமலாக்கப்பட்டதால், கர்நாடகா, ஆந்திரா, கேரளா என்று மொழி அடிப்படையில் தனித்தனி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு இன்றைக்குச் சரியாக 50 ஆண்டுகள் ஆகின்றன. கர்நாடகாவில் இந்நாளை, ‘கன்னட ராஜ்யோத்ஸவா‘ (Rajyotsava day) என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். கேரளாவில் ‘கேரளப் பிறவி தினம்‘ என்று பெயர். ஆனால், அப்போது பிரிக்கப்பட்ட போது, மெட்ராஸ் ஸ்டேட், மைசூர் ஸ்டேட், நிஜாம் ஸ்டேட், கேரளா ஸ்டேட் என்று தான் பெயரிடப்பட்டன. பின்னர் 1968-இல் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் பெற்றது யாவரும் அறிந்ததே.

கர்நாடகம் 1956-இல் தனியாகப் பிரிக்கப்பட்டாலும், மைசூர் என்ற பெயர் தான் இருந்தது. பின்னர் 1973-இல் கர்நாடகா என்ற பெயர் பெற்றது. அன்று முதன் ‘கன்னட ராஜ்யோத்ஸவம்’ கொண்டாடப்படுகிறது.

அதே போல, சுதந்திரத்திற்கு முன்னால், திருவாங்கூர், மலபார், கொச்சி என்று பிரிந்திருந்த மாநிலங்கள், கேரளா என்ற புதிய மாநிலமானது 1956-இல் தான். உலகெங்கும் இருக்கிற மலையாள நண்பர்கள், இந்நாளைக் ‘கேரளப் பிறவி’ என்று கொண்டாடுகின்றனர்.

இன்றைய மெட்ராஸ் ஸ்டேட்டில் ஐக்கியமாகியிருந்த ஆந்திராவைப் பிரித்துத் தனி மாநிலம் அமைக்கும் கோரிக்கை நெடுநாளாக இருந்து வந்தது. ‘மெட்ராஸ் மானதே’ என்று கோஷமிட்டு சென்னையைத் தலநகராகக் கொண்ட ஆந்திரா அமைக்க வேண்டிப் போராட்டங்கள் நடைபெற்றன. இருந்தாலும், அன்றைக்கு மாநிலத்திலும் மத்தியிலும் தமிழர்களின் ‘கை’ ஓங்கியிருந்ததால், சென்னை தமிழகத்திற்கே கிடைத்தது. 1952-இல் ‘குர்நூலை’த் தலைநகராகக் கொண்டு ஆந்திரா அமைக்கப்பட்டது. பின்னர் 1956-இல் தான் தெலங்கானா ஆந்திராவுடன் சேர்க்கப்பட்டு, ‘ஐதராபாத்’தைத் தலைநகராகக் கொண்டு இன்றைய ஆந்திரா பிறந்தது.

சுஜாதாவின் சில்வியா
வெகு நாள் கழித்து விகடனில் சுஜாதா அவர்கள் புதிய தொடர்கதை எழுதுகிறார் என்று கேள்விப்பட்ட அடுத்த நொடி ஓடிச் சென்று விகடன் வாங்கி விட்டேன். சுஜாதா அவர்களின் எழுத்து மீது மிகுந்த ஆர்வம் கொண்டவன் என்பதால் பல எதிர்பார்ப்புகள் எனக்கு. அதிலும் கணேஷ் வசந்த் நாவல் என்பதால் எதிர்பார்ப்புகள் இன்னும் அதிகமாகவே இருந்தது.

வழக்கம் போல் கலர் கலராக படம் போட்டிருந்த விகடனின் டெம்ப்டேஷனை எல்லாம் தாண்டி, சுஜாதா பக்கத்திற்கு வந்தேன். கிடைத்தற்கரிய செப்பேடு கிடைத்துவிட்டாற்போல வாசிக்கத் தொடங்கினேன்.  கதை எனக்குப் பரிச்சயமான ஜி.என்.செட்டி ரோட்டில் தொடங்குகிறது. பொதுவாக சுஜாதா நாவல்களை வாசிக்கும்போது இருக்கும் ‘அட…’ என்ற ஃபீலிங் இதில் அவ்வளவாக இல்லை. சுஜாதா தம்முடைய வழக்கமான க்ளீஷேக்களை அளவுக்கதிகமாகப் பயன்படுத்துகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. பொதுவாக கதையோடும் நடையோடும் ஒட்டி விளையாடும் அவருடைய நையாண்டிகள், இதில் கொஞ்சம் ஓவர் யூஸ் செய்யப்பட்டது போல தோன்றுகிறது. எனக்கு மட்டும் தான் இப்படித் தோன்றுகிறதா, இல்லை வாசகர்கள் பலருக்கும் இதே கருத்து இருக்கிறதா என்று தெரியவில்லை.

‘டைலாமோ’ பாடல், கானா உலகநாதன் – என்று இன்றைக்கிருக்கும் சென்ஸேஷன்களைத் தான் ஃபாலோ அப் செய்வதை வலுக்கட்டாயமாகப் பிரகடனப்படுத்தாமல் இருந்திருக்கலாம். இன்னும் அவருடைய அதே பாணியைத் தான் கையாள்கிறார் என்றாலும், சிறு தொய்வு தெரிகிறது. பொதுவாகப் பெண்களிடம் “உங்களை ஒரு அரங்கேற்றத்தில் பார்த்திருக்கேன்” என்று சொல்லிக் கடலை போடும் வசந்த், இதில், “உங்களை ஒரு ரேம்ப்வாக்கில் பார்த்திருக்கேன்” என்று சொல்வது ஒரு முன்னேற்றம்

மற்றபடி இக்கதையின் தொடக்கம் அவ்வளவு ஈர்ப்பாக இல்லை. சுஜாதா எழுதினாரா, இல்லை, சுஜாதாவின் நடையில் எழுதத் துடிக்கும் எண்ணற்றவர்களில் யாரோ எழுதினார்களா என்று எண்ணும்படி உள்ளது   அவர் நடையிலேயே சொல்வதென்றால், ஜல்லியடிக்கிற சமாசாரம் தான்.  “அப்படீன்னா?” என்றார் வசந்த். “அப்படியா?” என்றார் கணேஷ். -ரசிக்கும்படி இருந்ந்தது.

சுஜாதாவை விமர்சிக்கும் அளவுக்கு எனக்கு ஞனமோ அனுபவமோ இல்லை என்றாலும், அவரின் நீண்ட நாள் ரசிகன் என்ற முறையில் என் கருத்துகளைத் தான் பதிந்தேன். முதல் அத்தியாயம் தான் முடிந்திருக்கிறது. இன்னும் போகப் போக அவருக்கே உரிய ஸ்டைலில் கதை நகரும் என்று நம்புவோம்.

புதுமலர்ச்சி
வெகு நாள் கழித்து மீண்டும் வலைபதிக்கிறேன். என் வலைப்பதிவைப் படித்து ஊக்கப் படுத்திய அன்பர்களுக்கும், என் இனிய நண்பர்களுக்கும் மிக்க நன்றி. இனியும் தொடர்ந்து இங்கே எழுத விரும்பி, காற்று வெளியிடை, என் எண்ணத் தீற்றல்களுக்கு மீண்டும் புதுமலர்ச்சி அளிக்கிறேன்.  Orkut நண்பர்கள் இணையத்தளம் வழி அறிமுகமான என் இனிய நண்பர் பிரதீப் (Cognizant) அவர்களின் ஆங்கில வலைப்பதிவுக்கு என் வாழ்த்துகள். தனது நண்பர்கள் தினப் பதிவில் ஒரு இன்ப அதிர்ச்சியாக என் பெயரையும், என் வலைப்பதிவு முகவரியையும் இணைத்த அன்பிற்குரிய தோழி விஜிக்கு மிக்க நன்றி.  அண்மையில் படித்த கவிஞர் வைரமுத்து அவர்களின் "கொஞ்சம் தேநீர், நிறைய வானம்" (திருமகள் நிலையம்) என்ற புத்தகத்தில், தேநீர் பற்றி அவர் எழுதியிருந்த "ஆளுக்கொரு கோப்பை" என்ற கவிதை, தேநீர் போலவே சுவையாய் கதகதப்பய் இருந்தது…  தேநீர் பருகும் நிமிடங்கள் சிலநிமிடத் திருவிழாக்கள்  தேநீர்க்கோப்பை ஒரு கையடக்க சன்னிதானம்  கூப்பிட்டபோது வரம்தந்தோடிப்போகும் மலிவு தெய்வம் தேநீர்  உதடுகளில் சூடுகொளுத்தி கதகதப்பாய் நவுதடவி சுவையரும்புகள் ஒவ்வொன்றாய்த் தொட்டெழுப்பி இனிப்பு கடந்தொரு துவர்ப்பு பரப்பி தொண்டையில் நழுவும்போதே ரத்தக் குழாய்கள் புடைக்க மலர்த்தி  இருதயத்தின் உணர்ச்சிமயமான பிரதேசத்தை முறைப்பெண்ணின் முந்தானைப்போல் சிருங்காரமாய் உரசி  குடலில் விழுந்த மறுகணம் மூளையின் திரிகளில் அது சுடர்கொளுத்தும் போது மோட்சத்தின் பக்கத்து வீதிவரை சென்று திரும்பும் ஜீவாத்மா.   – கவிஞர் வைரமுத்து  வலைப்பதிவிற்குப் புதுமலர்ச்சி கொடுத்த கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு நன்றி!   மீண்டும் சந்திக்கிறேன்…

கேட்டுக்க மச்சி…
மூச்சு விடாமல் பாடுபவர்களுக்கு நம்மூரில் என்றுமே மவுசு உண்டு. டிஜிட்டலில் குரல்களைச் செதுக்கும் இக்காலத்தில் மூச்சு விடாமல் பாடுவது ஒன்றும் மலையை நகர்த்துகிற செயல் இல்லைதான். இருந்தாலும் பள்ளியில் படித்த சமயம், நண்பன் ஒருவன் SPB போல மூச்சு விடாமல் பாடி அரங்கில் கைத்தட்டல் வாங்கிய போது, என் வயிறு அண்ணாமலை தீபம் மாதிரி சுடர் விட்டு எரிந்து கொண்டிருந்தது. ஷங்கர் மஹாதேவனின் Breathless வரிகள் அனைத்தும் எனக்கு அத்துப்படிடா என்று பீத்திக் கொள்வான் இன்னொருவன். (அடியேன் கல்லூரி முதலாம் ஆண்டில் மேடையில் ஏறி தேவகானம் பாட, சீனியர்கள் காலில் விழாத குறையாக, "தயவு செஞ்சி இனிமே பாடாதெப்பா… உனக்குக் கோடி புண்ணியம்!" என்று என்னிடம் வாக்குறுதி பெற்ற வரலாறு தெரியுமா உங்களுக்கு?)  மூச்சு விடாமல் பாடுபவர்கள் ஒரு ரகம் என்றால், மூச்சு விடாமல் பேசுபவர்கள் இன்னொரு ரகம். சமீப காலமாக சென்னையில் ஒலிபரப்பாகிற FM அலைவரிசைகளின் கைவரிசைகள்… தமிழை ஒரு புதிய dimension-னுக்குள் அழைத்துச் (இழுத்து) சென்றுகொண்டிருக்கின்றன. யார் கண்டார்? மதுரை தமிழ், கோவை தமிழ், நெல்லை தமிழ், சென்னை செந்தமிழ் மாதிரி ரேடியோ தனித்தமிழ் : 'இது செம ஹாட் மச்சி' – என்று மாடர்னாக ஸ்லோகனுடன் கூடிய ஒரு புது தமிழே கூட வரலாம்.  சென்னை வானொலி நிலையம், விவித் பாரதியின் வர்த்தக ஒலிபரப்பாக இருந்த காலம் முதல் வானொலியின் ரசிகன் நான். ரேடியோ antenna-வின் நுனியைப் பிடித்து இழுத்தால், ரேடியோவைப் போல் நாலு மடங்கு தூரத்திற்கு antenna வெளியில் நீண்டு வரும். அதை இரண்டு முழம் அளவுக்கு நீட்டி வைத்து ட்யூன் செய்தால், ஸ்ஸ்ஸ்…. என்ற சப்தத்துக்கு இடையிடையே ரொம்ப சிரமப்பட்டு சென்னை எஃப் எம் எடுக்கும். ப்ரியா விஷன் பிரியமான நேரம், VRG நேரம் என்று ஒரு நேரப் பட்டாளமே உண்டு. அதெல்லாம் ஒரு காலம்… இன்று பாக்கெட் ரேடியோவை ஆன் செய்தாலே போதும். கத்திபராவுல traffic ஸ்லோவா மூவ் ஆயிட்டிருக்கு, கோயம்பேட்டுல லேசா தூறிக்கிட்டிருக்கு, அடையாறுல டிஸ்கவுண்ட் சேல்…' என்று சென்னை நகரமே பாக்கெட்டில்! சுருக்கமாகச் சொன்னால், இப்போதைக்கு சென்னையில் FM ரேடியோ தான் GPS.  இன்று காலையில் எதேச்சையாக ரேடியோ மிர்ச்சிக்கு ட்யூன் செய்தேன். மின்னல் வேகத்தில் பேசிய பீட்டர் யுவதியைக் கஷ்டப்பட்டு follow பண்ணிய எனக்கு, போதி மரத்தடி புத்தர் மாதிரி திடீரென்று ஞானோதயம் ஆனது. 'அடங்கொயாலு! இவ பேசற்து தமிழ் தான்டா!!!' என்று எனக்கே ஞானோபதேசம் செய்து கொண்டேன். என்ன பேசுகிறாள் என்று உன்னிப்பாகக் கவனித்தேன். ஒரு பொது அறிவுக் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாள். நல்லவேளையாக, கேள்விக்கு விடையளிக்க choice இருந்தது.  இதுதான் கேள்வி: நம்ம MTC பஸ்களால் (சென்னை மாநகரப் பேருந்து) மக்களுக்கு என்ன நன்மை? (a) காலையில் நல்ல உடற்பயிற்சி ஆவதற்கு உதவுகிறது (b) மதிய வேளையில் படுத்து உறங்குவதற்கு உதவுகிறது (c) காதலன்/காதலியோடு கடலை போடுவதற்கு உதவுகிறது இதற்கான பதிலை 8888 என்ற எண்ணுக்கு sms பண்ண வேண்டும். இந்த வாக்கெடுப்பு முடிவுகள் எவ்வாறு இருக்கும் என்று 2 மணி நேரம் விவாதம், மக்களின் பேட்டி என்று ஒரு மினி பல்கலைக்கழகமாக உருவெடுத்து, களை கட்டியது இன்றைய மிர்ச்சி (செம ஹாட் மச்சி).  ரேடியோவில் என்னால் மறக்க முடியாத விஷயம், அந்த RJ பெண்மணின் நிகழ்ச்சித் தொகுப்பு. நம்மூர் மெகா சீரியல்களில் சரக்கடித்து விட்டு, இதுதான் சாக்கு என்று சகட்டு மேனிக்கு உளறித் தீர்க்கும் ஹீரோ தான் எனக்கு ஞாபகத்துக்கு வந்தார். நாலு சுவர்களுக்கு மத்தியில் அமர்ந்து கொண்டு, எக்ஸ்பிரஸ் வேகத்தில் இம்மியளவு gap-ப்பும் இல்லாமல் பேசிக்கொண்டே இருக்கும் அந்தப் பெண்ணுக்கு ஓ போடலாம். high-யில் பேசுவது போன்ற பாணியை மாற்றின

ல் பரவாயில்லை.  நூறு ஆண்டுகளுக்கு முன்னால் ரேடியோ கண்டுபிடித்த மார்கோனி, அதை என்ன காரணத்துக்காகக் கண்டுபிடித்தார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இன்று அந்த ரேடியோ இது போன்ற அறிவை வளர்க்கும் விஷயங்களில் பயன்படுவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. எதிர் காலத்தில் இட்லிக்கு தொட்டுக்கொள்ள சரியான side dish சட்னியா, சாம்பாரா, மிளகாய்ப் பொடியா, வடைகறியா என்று sms போட்டி வைத்து, பட்டிமன்றம் நடத்திப் பரிசளிப்பார்கள் என்பது மட்டும் நிச்சயம்.  பாப்பையா தயாராக இருப்பாராக!

கம்ப்யூட்டரும் கவிதையும்
கல்லூரியில் படித்த போது, செயற்கை அறிவு (Artificial Intelligence) தொடர்பாகச் சில விஷயங்கள் படித்து வந்தேன். பொதுவாகவே, அடிப்படைக் கோட்பாடுகளை விட, extraordinary-யான விஷயங்களில் தான் மாணவர்கள் முதலில் மூக்கை நுழைப்பார்கள். அடிப்படைகள் விளங்கியதோ இல்லையோ, அற்புதங்கள் நிகழ்த்திவிட வேண்டும் என்று துடிப்பார்கள். Fuzzy logic, Neural Network, AI என்றால், மாணவர்களுக்கு அது ஒரு கனவுலகம். Fuzzy-யில் எப்படியாவது ஒரு project செய்து விடுவேன் என்று கொள்கை கோஷமிட்டுத் திரிவார்கள். ரிஸர்ச், டெவலப்மெண்ட், கிரியேட்டிவிட்டி, இன்னொவேஷன், புடலங்காய் என்றெல்லாம் ஓவராகப் பீட்டர் விட்டு அலைவார்கள். எல்லாம் final year வரும் வரையில் தான். அதன் பிறகு, எங்காவது போய், யாரையாவது பிடித்து, எப்படியாவது ஒரு project-ட்டை முடித்தால் போதும்டா சாமி என்று அடங்கி விடுவார்கள்.  (குறிப்பு: நான் சாதாரணப் பொறியியல் மாணவ மாணவியர் பற்றிப் பேசுகிறேன். 'எல்லோரும் அப்படி இல்லை' என்று நிஜமான அறிவுஜீவிகள் யாரும் என்னிடம் சண்டைக்கு வராதீர்கள்).  மீண்டும் விஷயத்துக்கு வருவோம். இந்த செயற்கை அறிவில் அப்படி என்னத்தான் செய்கிறார்கள்? என்ன மாய்மால வித்தை செய்து கணினிக்கு அறிவூட்டுகிறார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு. இத்துறையில் பழம் தின்று கொட்டை போட்ட MIT பேராசிரியர் மார்வின் மின்ஸ்கி அவர்களுடைய இணையத்தளத்தில் சென்று என் தேடுதல் வேட்டைக்குப் பிள்ளையார் சுழி போட்டேன். (பிள்ளையார் சுழியைத் தவிர வேறு எதைப் போட்டேன் என்று கேட்காதீர்கள்).  வீரப்பன் காட்டைப் போலப் பரந்து விரிந்திருந்த அவரின் தளத்தில், நானும், அதிரடிப் படை போல ஏதோ ஒரு மூலையில் தடவிக் கொண்டிருந்தேன். மனித மனம் எண்ணங்களைக் கையாளும் விதங்களைத் தாண்டி நான் வேறெதையும் உருப்படியாகப் படித்ததாக ஞாபகம் இல்லை. அதிலேயும், அவர் சொல்லியிருந்த சில விஷயங்கள் வித்தியாசமானதாக, சிந்தனையைத் தூண்டும் விதமாக அமைந்திருந்தன.  கணிப்பொறியால் சிந்திக்க முடியுமா? – என்று பொத்தாம்பொதுவாகக் கேட்டால், ஒரு இயந்திரத்தால் எப்படிச் சிந்திக்க முடியும்? என்று ஒரு சாராரும், நிச்சயமாகக் கணினி ஒரு நாள் சிந்திக்கும் என்று ஒரு சாராரும் சர்வகாலத்திற்கும் விவாதித்துக் கொண்டிருப்பார்கள். அண்மையில் எழுத்தாளர் சுஜாதாவின் நூல் ஒன்றில் இக்கவிதையைக் கண்டேன்-  "சொல்லடா சிவசாமி – என்னைச் சுடர்மிகு அறிவுடன் படைத்துவிட்டாய் எல்.எஸ்.ஐ. தாராயோ – இந்த இன்டர்நெட் பயனுற வாழ்வதற்கே!" எதிர்காலத்தில் கணினி கவிதைகள் கூட இயற்றும் என்று எழுதியிருந்தார். இனி வரும் கணினி யுகம் குறித்த அவரின் forecast அது.மனிதன் தான் என்ன செய்கிறோம் என்கிற consciousness-உடன் செயல்படுகிறான், ஆனால் ஒரு இயந்திரமான கணினிக்கு இந்த consciousness எப்படி இருக்கும்? "நான் ஒரு கணினி. என்னை உருவாக்கியவர் கந்தசாமி. எனக்குள் 10 மில்லியன் ட்ரான்ஸிஸ்டர்கள் உள்ளன. நான் வெறும் electronic குப்பைகளின் சேர்த்தி தான். ஆனாலும் என்னால் சிந்திக்க முடியும். சிரிக்க முடியும். அழ முடியும். எனக்கும் பீலிங்க்ஸ் இருக்கிறது"- இப்படி ஒரு கணினியால் conscious-ஆகச் சிந்திக்க முடியுமா? – இதற்குப் பேராசிரியர் மின்ஸ்கி ஒரு வித்தியாசமான விளக்கம் தருகிறார்.  நான் நடக்கிற போது, எனக்குள் பல நூறு தசைகள் இயங்குகிறன. எத்தனையோ நியூரான்கள் ஒன்றோடொன்று கிசுகிசுத்துக் கொள்கின்றன. என் மூளை என் கை கால்களுக்கு எத்தனையோ கட்டளைகச் இடுகிறது. ஆனால், இதெல்லாம் எனக்குத் தெரிகிறதா என்ன? உதாரணத்திற்கு, நான் நேராக நடந்து மார்க்கெட்டிற்குப் போய்க் கொண்டிருக்கிறேன். வழியில் த்ரிஷாவின் போஸ்டரைப் பார்க்கிறேன். உடனே என் மூளையின் நீள அகலங்களில், நியூரான்களில் பதிந்து வைத

்திருக்கிற த்ரிஷாவின் முகத்தை வெளிக்கொணர்கிறது. எதிரில் இருக்கும் த்ரிஷாவின் போஸ்டரோடு ஒப்பிடுகிறது. டெஸ்ட் ஓகே என்றால், நான் போஸ்டரைப் பார்த்து ஜொள்ளு விடுகிறேன். அது கூட நான் செய்வதில்லை. என் மூளைதான் என் எச்சில் சுரப்பிகளுக்குக் கட்டளையிட்டு செயல்பட வைக்கிறது. (ஓகே ஓகே, இதெல்லாம் சொல்லி டபாய்க்கிறான் பார் என்கிறீர்களா?). மூளை என் கால்களுக்குக் கட்டளையிட, நேராகப் போய்க் கொண்டிருந்த நான், என் கால் தசைகளின் உதவியால் த்ரிஷாவை நோக்கி நடைபோடுகிறேன்.  "என்னைப் பார்த்துச் சொல்லு, என் கண்ணைப் பார்த்துச் சொல்லு", என்று நம்மூர் முரட்டு ஹீரோ ஸ்டைலில் கேட்கிறேன், இப்படி நீங்கள் யாராவது த்ரிஷாவின் போஸ்டரைப் பார்த்தால் நான் மேலே சொன்ன மூளை சம்பந்தப் பட்ட விஷயங்களை எல்லாம் நினைத்துப் பார்ப்பீர்களா, இல்லை, த்ரிஷாவின் பால் வடியும் அழகு முகத்தை ரசிப்பீர்களா? 'ம்ம்ம்… இப்போது மூளை கைகளுக்குக் கட்டளை இடுகிறது, இப்போது கைகள் மூளைக்கு acknowledgement அனுப்புகின்றன.' இப்படியெல்லாம் சிந்தித்து யாருக்கவது அனுபவம் உண்டா? (இருந்தால் சொல்லுங்கள், நான் உங்களுக்குச் சரியான வழி காட்டுகிறேன்)  இப்படி, நம் மூளைக்குள் என்ன நடக்கிறது என்ற விஷயம் நமக்கே தெரிவதில்லை. அதற்காக, நாம் எல்லாம் சிந்திக்கத் தெரியாத முட்டாள்கள் என்று சொல்ல முடியுமா? பின் ஏன் கணிப்பொறிக்கு மட்டும் consciousness தேவை என்கிறீர்கள்? எனவே, கணிப்பொறிக்கு consciousness இருந்தால் தான் அது சிந்திக்கிறது என்பது காதில் பூ சுற்றும் செயல். Consciousness இல்லமலேயே கணினியால் மனிதன் போல் சிந்திக்க முடியும். இதை நான் கூறவில்லை. MIT பேராசிரியர் மின்ஸ்கி கூறுகிறார். சிந்திக்க வேண்டிய விஷயம்.  அதெல்லாம் இருக்கட்டும். டேட்டா மைனிங், டேட்டா வேர்ஹவுஸிங் என்றெல்லாம் படிக்கிறோம், செயல்படுத்தவும் செய்கிறோம். ஆனால் எங்கள் இறுதியாண்டு project report-ட்டை சி.டி.யில் போட்டுக் கொடுக்கலாமே, எதிர்காலத்தில் reference-க்கு எளிதாக இருக்குமே என்றால் யாரும் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்கிறார்கள். இந்த லட்சணத்தில், கணினி கவிதை இயற்றுவது பற்றியெல்லாம் வேறு பேசிக்கொண்டிருக்கிறோம். இருட்டறையில் உள்ளதடா உலகம்! பேப்பர் பென் யூஸ் பண்றவனும் இருக்கின்றானே!!

வந்துட்டான்யா வந்துட்டான்யா…
நேற்று காலையில் 'தினமணி' படிக்கும் போது, மதியின் 'அடடே!' column கண்ணில் பட்டது. இப்பத்தான்யா பீஹார் மக்கள் சரியான தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள். எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலத்தைக் கொடுக்காமல் விட்டிருக்கிறார்கள் – குடியரசுத் தலைவர் ஆட்சி அமைந்திருக்கிறது. அவர் தான் பீஹாருக்குச் சரியான ஆள் – என்று இரண்டு பேர் பேசிக்கொண்டிருப்பது போல cartoon போட்டிருந்தார். அதுவும் வாஸ்தவம் தான். எங்களைத் தான் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று லாலு, பாஸ்வான், பாஜக என்று எல்லோருமே கவர்னரை வேண்ட, கடைசியில் ஆட்சி அமைத்ததோ குடியரசுத் தலைவர் தான்.  ஒழுங்கான ஆட்சி அமைந்த மத்தியிலும் மாநிலத்திலும் மன்றங்கள் எப்படி நடக்கின்றன என்பது நாடறிந்த விஷயம். நாங்கள் சொல்வதைச் செய்யாவிட்டால் நாடாளுமன்றத்தையே நடத்த விட மாட்டோம் என்று ஒரு கட்சி முழங்குகிறது. கடைசியில் நஷ்டப்படப் போவது யார்? மக்கள் தானே? ஜனநாயகத்தில் எல்லோருமே மன்னர்கள். மன்னர்களின் அட்டகாசம் தாங்கமுடியலைப்பா…! கடவுளே, மன்னர்கள் இருக்கட்டும். மக்களை யாராவது காப்பாற்றுங்களேன்!

“டேய், கையை வச்சிக்கிட்டு – சும்மா இருடா”
கண்ணதாசன் இன்று இருந்தால் கண்ணீர்தாசன் ஆகியிருப்பார். இன்றைய சினிமாப் பாடல்கள் (?), பாடல்கள் என்கிற status-இலிருந்து இறங்கி, கதாநாயகன், கதாநாயகியின் காம லீலைகளில் இடம்பெறும் முணுமுணுப்புகளாக மாறி வருகிறது. இது வரவேற்கத்தக்கதா இல்லையா என்பதை விடுங்கள். கவிஞர்களின் கற்பனை வறண்டு விட்டதா, அல்லது அஷ்டகோணத்தில் வளர்ந்து விட்டதா என்பது தான் புரியாத புதிராய் உள்ளது. பாடல்களில் இருந்த அந்த சூட்சமம், நெளிவு எல்லாம் மாறி, ஒரேடியாக வெடித்துச்சிதறும் உணர்ச்சிக் கொப்பளங்களாகி விட்டன என்றுதான் கருதத் தோன்றுகிறது.  இங்கே ஒரு லிஸ்டே கொடுக்கலாம்.

சமீபத்தில் கேட்ட ஒரு பாட்டு, “திருட்டு ராஸ்கல், திருட்டு ராஸ்கல், திருடவாயேன்டா” என்பது. கவிஞர்களுக்கு எப்படித்தான் கற்பனை நீரோடை இப்படியெல்லாம் வளைந்து ஓடுகிறது என்றே புரியவில்லை. அன்றாடம் மச்சான்க்ள் பேசிக்கொள்ளும் வார்த்தைகள் எல்லாம் பாடல் வரிகளாகின்றன என்பதில் அவர்களுக்கு மகிழ்ச்சியோ என்னவோ தெரியவில்லை.

இன்னும், கவிஞர்களின் காம profile-இல் சேர்க்க வேண்டியவை எத்தனையோ. குறுக்கு சிறுத்த modern யுவதி, இடுப்போரம் மச்சம் காட்டவா என்று public-ஆக மச்சானிடம் கேட்பது எங்காவது நடக்குமா? (அந்த பாடலின் மற்ற வரிகளைப் பற்றி கேட்காதீர்கள்). The degree of raunchiness in Tamil movie songs has grown up to irritating heights in the recent years என்று தான் சொல்ல வேண்டும்.  நம்மோடு சேர்ந்து ஆடுவதற்கு என்றே ஒரு சில மாதுகள் தமிழ்நாட்டில் எங்கேனும் கிடைக்கிறார்களா என்று தெரியவில்லை. திரையில் மட்டும் மலிந்து இருக்கிறார்கள். இவர்களில் மே மாதம் 98-இல் மேஜர் ஆனவர்கள் இருக்கிறார்கள், அத்தை பெற்ற தத்தைகள் இருக்கிறார்கள், ‘சீனா தானா’ என்று ஆடிக்களிக்கிறார்கள், சரக்கு வச்சிருக்கேன் என்று clue கொடுக்கிறார்கள், கட்டிப்புடிடா என்று உரிமையோடு கேட்கிறார்கள், சின்ன வீடாய் வர ரெடியாக இருக்கிறார்கள், இன்னும் என்னென்னவோ…

மார்ச் 8 உலக மகளிர் தினம் என்கிறோம், பேரணி நடத்துகிறோம், பேட்டி அளிக்கிறோம், முகப்புக் கட்டுரை எழுதுகிறோம், சிறப்பு மலர் வெளியிடுகிறோம், அறிக்கை கொடுக்கிறோம், அரசாணை பிறப்பிக்கிறோம்… ஆனால் 21-ஆம் நூற்றாண்டிலும், பெண்ணைப் போகப் பொருளாகவே வைத்துக் கொண்டு பம்மாத்து காட்டுகிறோம். 33-க்காக அவர்கள் இன்னும் இரந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குத் தெரியவில்லை, இட ஒதுக்கீடு செய்ய நாம் யார்? -என்று. குடும்பத்தில் இன்றும் பெண்ணுக்கு முடிவெடுக்கும் அதிகாரம் இல்லை. தன் வாழ்க்கையைத் தீர்மானிக்கிற துணிச்சல் இல்லை.

ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் எத்தனை நாட்கள் தான் பெண் மறைந்து இருந்து வாழ்வாள்? பெண்ணுக்கு வெற்றி எப்போது?   அடிப்படையிலேயே கோளாறு இருக்கிறது. அது மாறும் வரை, ‘அழகா இருக்காங்க’ என்று சொல்லி தலையில் மிளகாய் அரைத்துப் பணம் பார்ர்க்கும் கூட்டம் அடங்காமல் அட்டகாசித்துக் கொண்டுதான் இருக்கும்.

DIYA – இளைஞர்கள் தொடங்கிய சமூக நல இயக்கம்
செப்டம்பர் 2004-இல், மின்னஞ்சல் வழியாக சில நண்பர்கள் நாங்கள் வெட்டி அரட்டை அடித்துக்கொண்டிருந்தோம். அப்போது, EEE Dept-ஐச் சேர்ந்த நண்பர் சீனிவாஸ் மனதில் ஒரு சிந்தனை உதித்தது. நம் எல்லோருக்கும் சமுதாய மேம்பாடு, நலிந்தோர் நலன், பரோபகாரம் போன்ற விஷயங்களில் நாட்டம் உண்டு. நாம் ஏன் சமூக நல இயக்கம் ஒன்றைத் தொடங்கக் கூடாது என்று நண்பர் எண்ணினார். இக்கருத்தை எங்களிடம் எடுத்து வைத்தார். அனைவரின் இசைவுடனும், ஆதரவுடனும் தொடங்கிய சமூக நல இயக்கம் தான் தியா (Diya). இதற்கு, slogan ஆக, Illuminating lives… என்பது தெரிவு செய்யப்பட்டது. அன்று முதல் இன்று வரை எத்தனையோ வாழ்வுகளில் ஒளியேற்றியிருக்கிறது.

எங்கெல்லாம் orphanageகளுக்கு நிதியுதவி, பொருளுதவி தேவைப்படுகிறதோ, அங்கெல்லாம் அவ்வுதவிகளைப் புரிந்து வருகிறோம். அங்கத்தினர் மற்றும் பிறர் அளிக்கும் நிதியைக் கொண்டு எங்களால் இயன்ற நல உதவிகள் செய்கிறோம். நலிந்தோர் மனைகளுக்குச் சென்று, அவர்களுக்கு விருந்தளித்து, குழந்தைகளுடன் விளையாடி, அவர்களை மகிழ்வித்து, அவர்களின் அன்பில் திணைக்கிறபோது, எங்கள் மனதிற்குள் ஒரு இனம் தெரியாத பூரிப்பு மலர்வதை ஒவ்வொரு தியா அங்கத்தினரும் சொல்வார்.

செப்டம்பரில் தொடங்கிய “தியா”வில் இன்று சுமார் 125 பேர் அங்கத்தினராக உள்ளனர். இது வரைக்கும் ரூ.30,000/- அளவிற்கு சமூக நல விஷயங்கள் செய்துள்ளோம் என்பதைக் கூறும்போது, எங்களுக்குள்ளேயே தியாவின் ஒளி பிரகாசிக்கிறது.

Jeroham ministries, உதவும் உள்ளங்கள், அன்புக் கரங்கள், சுபத்ரா ஹோம் போன்ற பத்திற்கும் மேல்பட்ட ஹோம்களுக்கு நிதி, பொருட்கள் போன்ற உதவிகளைச் செய்திருக்கிறோம். தியா சார்பில் சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு பல நல உதவிகள் புரிந்தோம். ஒரு இரத்த தான முகாமிற்கும் ஏற்பாடு செய்திருந்தோம்.

7 மாதங்களுக்கு முன்னால் ஒரு கனவு போல் இருந்த தியா, இன்று பல சாதனைகளுடன் வெற்றிகரமாக நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. இன்னும் செய்வதற்கு எத்தனையோ திட்டங்கள் கனவுகளாக இருக்கின்றன. எதிர்வரும் காலங்களில் மேலும் பல சமூக நலக் காரியங்களில் ஈடுபட்டு, சமுதாயத்தை அனைத்து மக்களுக்கும் ஏற்ற வகையில் re-engineer செய்வதே எங்கள் நோக்கம்.  தியா பற்றிய விவரங்களுக்கு, எங்கள் இணையத் தளத்தைக் காண்க:  http://diya.org.in

இந்த வலைப் பதிவு (Weblog) எதற்காக?
அருமை நண்பர் Kaushik அவர்களுடைய மின்னஞ்சல்களிலும், வலைச் செயல்பாடுகளிலும் நான் அடிக்கடி ஒரு ஆங்கில வாசகத்தைக் காண்பதுண்டு. “I am not what I think I am. I am not what you think I am. I am what I think you think I am.” இதனுடைய சரியான அர்த்தம் என்னவென்று எனக்குத் தெரியாது. ஆனால், நாம் மற்றவர்களின் கண்கள் வழியாகத் தான் நம்மை நாமே மதிப்பீடு செய்கிறோம் என்பதுதான் இதற்கு விளக்கம் என்று நினைக்கிறேன். அதாவது, மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேனோ, அதுவே நான். (ஆமாம், இது எனக்கு இன்னும் குழப்பமாகத் தான் இருக்கிறது).

இந்த விஷயங்களை ஏன் சொல்கிறேன் என்றால், நான் யார், என்னால் என்ன செய்ய முடியும், எனக்கு எதில் நாட்டம் இருக்கிறது என்பது எனக்கே இன்னும் புதிர்தான். Engineering படித்து முடித்தாகி விட்டது, IT உலகிலும் அடியெடுத்து வைத்தாகி விட்டது. இன்னும் எனக்கு எதில் விருப்பம் என்று எனக்கே தெரியாது.

பத்தாம் வகுப்பு படித்த போது, நிச்சயமாக ஒரு ஆசிரியன் ஆக வேண்டும் என்று முடிவு செய்திருதேன். பின்னால், பதினோராம் வகுப்பு படித்த போது, இலக்கியம் ஒரு நல்ல பாதையாகத் தெரிகிறதே என்று நினைத்தேன். பள்ளி நாட்கள் முடிக்கிற போது, எழுத்துலகம் தான் எனக்கானது என்று அப்பாவிடம் அடம் பிடித்தேன். இறுதியாக, Engineering college-இல் ECE பிரிவில் சேர்ந்தேன். நேற்று வரை, சரி, Electronic உலகத்தை ஒரு கை பார்ப்போம் என்று பலதரப்பட்ட விஷயங்களிலும் கவனம் செலுத்தினேன். கடைசியாக ஒரு நாள், Campus Interview என்று சொல்லி வந்தார்கள். ஒரு IT job-பும் கிடைத்தது. ஆனால், இன்னும் மனம் அலைபாய்ந்து கொண்டு தான் இருக்கிறது.

எனக்குக் கல்லூரிக்குச் செல்ல அலைச்சல் எதுவும் இருந்ததே இல்லை. கல்லூரிப் பேருந்து வீட்டு வாசலில் சரியாக வந்து நிற்கும். நேராகக் கல்லூரியில் சென்று சேர்க்கும். ஒரு இயந்திரமயமான (Mechanized) கல்லூரி வாழ்க்கை. பள்ளி, ஒரு சிறிய நண்பர் வட்டம், வீடு, வாசிப்பு, வாழ்க்கை என்று இருந்த எனக்கு, சென்னையின் நீள அகலங்களே, கல்லூரிக்குச் சென்ற பிறகுதான் தெரியும். (சென்னை தியாகராய நகர் எங்கோ வேற்று உலகத்தில் இருப்பதாக நினைத்த சிறு வயது ஞாபகங்கள், இன்று அசைபோட்டுப் பார்க்கச் சிரிப்பாக இருக்கிறது). தினமும் கல்லூரிக்குச் செல்லும் நீண்ட நெடிய பயணத்தில், சுற்றி நடக்கிற விஷயங்களைப் பார்த்துக் கொண்டிருந்தால் சாதாரண பொது ஜனம் கூட இலக்கியவாதியாகி விடலாம். நானோ நான்கு ஆண்டுகளாக இதைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். சில விஷயங்கள் மனதில் நிற்கும், சில கோபத்தைத் தூண்டும், சில, சிரிப்பைத் தரும். சிறுகதையே எழுதிவிடலாம் – இவவற்றை வைத்து. நான் எனக்குத் தெரிந்த விதத்தில் எழுதுகிறேன். வாசித்துப் பாருங்கள். உங்கள் Comments-ஐ எனக்குச் சொல்லுங்கள்.