Home » Archive

Articles in the அனுபவம் Category

Featured, Food and Dining, அனுபவம், சென்னை, நூல் நயம், பொது »

[15 Jan 2007 | 5 Comments | 143 views]
சென்னை 30-ஆவது புத்தகக் காட்சி

ஜனவரி மாதம் என்றாலே சென்னையில் என் போன்ற புத்தகப் புழுக்களுக்குக் கொண்டாட்டம் தான். ஆண்டுதோறும் சென்னையில் எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் சென்னை புத்தகக் காட்சி ஆண்டுக்கு ஆண்டு மெருகேறிக் கொண்டே போகிறது. வழக்கமான இடத்தில் இல்லாமல், இம்முறை பூந்தமல்லி நெடுஞ்சாலையில், பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரில் உள்ள பள்ளியில் காட்சியை அமைத்திருக்கிறார்கள். இவ்விடத்தில் முதல் நல்ல விஷயம், போக்குவரத்து இடர்பாடு இல்லாமல் எளிதில் சென்றடைய முடிகிறது. வெளியில் வைத்திருக்கும் வண்ணமயமான வரவேற்பு வளைவைத் தாண்டிச் சென்று, உள்ளே ஏராளமாக இருந்த parking area-வில் வண்டியை நிறுத்தினோம்.
குமுதம், விகடன், எக்ஸ்பிரஸ் என்று எல்லோரும் சேர்ந்து வரவேற்றார்கள். நுழைவுச்சீட்டு வாங்க நேராகச் சென்ற எங்களுக்கு ஒரு சின்ன இன்ப அதிர்ச்சி. நடிகர் சூர்யா எழுதிய “இப்படிக்கு சூர்யா” என்ற நூல் வெளியீடு விழா நடந்து கொண்டிருந்தது. அலையன்ஸ் பதிப்பகத்தின் வெளியீடு. பேராசிரியர் …

அனுபவம், சென்னை, பொது »

[11 Jan 2007 | 2 Comments | 185 views]
மார்கழியில் மாக்கோலங்கள்

என் சிறு வயது முதலே, டிசம்பர் மாதத்து மத்தியில் மார்கழி மாதம் தொடங்கியதும் எங்கள் வீடு களை கட்டும். மார்கழி என்றாலே கோலங்கள் தானே. சிறியதும் பெரியதுமாய் வண்ணக் கோலங்கள். எங்கள் வீட்டில் பெண் பிள்ளைகள் யாரும் இல்லை என்பதால், கோலம் போடுவதில் அம்மா - பாட்டிக்கு அஸிஸ்டென்ட் வேலை செய்யும் விதமாகத் தொடங்கியது என் கோல மோகம். கோலங்களுக்கு கலர் போடுவதில் தொடங்கி, பின்னர் படிப்படியாக புள்ளி வைத்துக் கோலம் போடுவது முதல், பல காம்ப்ளிகேஷன்கள் கொண்ட கம்பிக் கோலங்கள் போடுவது வரை பலவும் பழகியிருக்கிறேன். பக்கத்து வீட்டார் கொண்டு வந்து கொடுத்த கோலப் புத்தகத்தில் இருந்த கோஅங்களையெல்லாம் காப்பி அடித்து நோட்டில் வரைந்து வைக்க ஆரம்பித்து, பின்னால், அதை அடிப்படையாகக் கொண்டு மண் தரையில் கோலமாவில் மாக்கோலம் போடும் அளவுக்குக் கைதேர்ந்தவனானேன் என்பதில் எனக்கு …

அனுபவம், சென்னை, தியா, பொது »

[1 Jan 2007 | One Comment | 85 views]
புத்தாண்டில் புதுத்தொடக்கம்

எனக்கு இந்தப் புத்தாண்டு புதுமையாக இருந்தது. புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்கிய போது டிசம்பர் 31, காலை 6.30 மணி. எங்களின் சமூக அமைப்பான தியா சார்பில் 2007-ஆம் ஆண்டுக்கான சமூகப் பணிகளுக்கு முன்னோட்டமாய் மரம் நடுவிழா கொண்டாடினோம். சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில், 5 மரக் கன்றுகளை நட்டு, அதற்குக் காப்பாக வேலி அமைக்கும் பணி காலையில் தொடங்கியது. அக்கம்பக்கத்தில் இருக்கும் கடைக்காரர்களிடம் பேசி, அவர்களின் அனுமதியும் ஆர்வமும் பெற்று, 5 இடங்கள் தேர்வு செய்தோம். நண்பர்கள் ஸ்ரீநிவாஸ், ஸ்ரீராம், விக்ரம் உள்ளிட்ட பலரும் சேர்ந்து, குழிகள் தோண்டி மரங்களை நட்டோம். மரங்களுக்குப் பாதுகாப்பாக எளிய முறையில், பொருட்செலவு இல்லாமல் வேலி அமைக்கும் திட்டத்தை நண்பர்கள் உருவாக்கியுள்ளனர். சைக்கிள் கடைகளில் இருந்து பழைய டயர்களை வாங்கிவந்து, அவற்றை உள்வெளியாகத் திருப்பிவிட்டால், பட்டையாக இருக்கும். நடுகிற மரத்தைச் …

அனுபவம், பொது »

[12 Nov 2006 | 6 Comments | 88 views]
இப்போது தான் ஈ அடிக்கிறேன்

ஆங்கிலத்தில் மிக அதிகமாக உபயோகிக்கப்படுகிற எழுத்து - ‘E’ தான். ‘அவனின்றி ஓரணுவும் அசையாது’ என்பது போல், ‘E’ இல்லையெனில் ஆங்கிலத்தில் வாக்கியங்களே இல்லை. இன்னும் E என்பது Energy-யைக் குறிக்கிற குறியீடு. எனர்ஜி என்பது சக்தி. E - ஆங்கில மொழியின் சக்தி. இன்று, அலுவலகத்தில் அடுத்த மேஜையில் இருக்கிறவரிடம் ஒரு தகவல் சொல்ல வேண்டும் என்றால் E-மெயில் அனுப்ப வேண்டியிருக்கிறது. வர்த்தகமெல்லாம் E-காமர்ஸாக மாறி வருகிறது. நாம் தினமும் உட்கொள்கிற உணவு செரிமானம் ஆவதற்கு, குடலுக்குள் இருக்கிற ‘E’.coli பாக்டீரியா தான் காரணமாக இருக்கிறது. இந்தத் தகவலையெல்லாம் என் கணிப்பொறியில் உள்ளீடு செய்வதற்கு E-கலப்பை என்ற மென்பொருளைத் தான் பயன்படுத்துகிறேன். ‘ஈ’ என்ற பெயரில் நயந்தாரா நடித்தப் படம் வந்து சக்கை போடு போடுகிறது. E என்ற பெயரில் கணிப்பொறி மொழி கூட உள்ளது.
கணிதத்தில் …

Featured, அனுபவம், சென்னை, பொது »

[28 Oct 2006 | 10 Comments | 92 views]
சென்னை மழைச் சுற்றுலா

சென்னையில் அழகான மழை! மழை என்றாலே சென்னை மிகவும் சுவாரஸ்யமாகி விடுகிறது. தெருவெல்லாம் கண்ணாடிகளாகி விடுகின்றன. கொஞ்சமாக பைக் சறுக்குகிறது. எல்லோரும் நத்தைகள் போல நின்று நின்று கவனமாக சாலைகளில் செல்கிறார்கள். குடைகள் இல்லாதவர்கள் தெருவில் ஓட்டம் பிடிக்கிறார்கள். தொப்பலாக நனைந்தும், வீரமாக வண்டியோட்டி வருபவர்களும் இருக்கிறார்கள். கார்களில் விருட்டெனப் பாய்ந்துகொண்டிருந்தவர்கள், இப்போது கார்களைச் செலுத்திக்கொண்டு, முன்னால் அதீத ஜாக்கிரதையுடன் செல்கிற சைக்கிள்காரனைப் பின்தொடர்ந்து, மெதுவாக மெதுவாக பவனிவருகிறார்கள். ஆட்டோக்கள் ‘நானே ராஜா’ என்று பாகுபாடில்லாமல் எல்லோர் மீதும் தண்ணீரை வாரியிறைத்து ‘ட்டப்பட்ட ட்டப்பட்ட’ என்று மோட்டார் புகை கக்க முன்னேறிச் செல்கிறார்கள். மஞ்சள், சிகப்பு, நீலம், கறுப்பு என்று கலர்கலராக ‘ஜெர்க்கின்’கள் அணிந்தவர்கள் பைக்குகளில் ஹீரோக்களாக பவனி வருகிறார்கள்.
இந்த சுவாரஸ்யமான (interesting) காட்சிகளெல்லாம் மழை வந்தால்தானே பார்க்க முடிகிறது. கொஞ்சம் கவனத்துடன் வண்டியைச் செலுத்த …

அனுபவம், பொது »

[17 Oct 2006 | 3 Comments | 47 views]

நிலப்பரப்பின் அடியில் எப்போதாவது அழுத்தம் அதிகமாகும் போது, பூமி லேசாகச் சிலிர்த்துக் கொள்வதுண்டு. அது பூகம்பமாக வெடித்து நம்மை ஒரு கை பார்த்துவிடுகிறது. அப்படி - எப்போதாவது சிலிர்த்துக் கொள்ளும் பூமி போல, எப்போதாவது சமயமும் சமாச்சாரமும் கிடைக்கிற போது தான் எழுதுவேன் போலும்… இருந்தாலும் இத்தனை நாளும் நான் எழுதுவதை நாலு பேருக்குச் சொல்லிக் கொள்ள உதவிய தமிழ்மணத்திற்கு என் நன்றிகள். எங்கிருந்தோ தள்ளிவிடப்பட்டு இங்கு வந்து விழுந்திருக்கிற (பாவம்) உங்களுக்கும் என் நன்றிகள். இனி விஷயத்திற்கு வருவோம். மிக நீண்ட காலமாக என்னுடைய நண்பர்களாக இருக்கிற பலரிடமும் ஒரு சர்வே நடத்தினேன். எத்தனைப் பேர் என்னுடைய மிக நீண்ட தூர நடைபயணத் துன்புறுத்தல்களுக்கு (torture) ஆளாகியிருக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு. பெரும்பாலும் எல்லாருமே ஆம் என்றார்கள். நடப்பது எனக்குப் பிடித்திருக்கிறது என்பதற்காக என்னோடு …

Travel, அனுபவம், பொது »

[14 May 2006 | 12 Comments | 89 views]

‘ஏவிசினியா மெரினா’ என்று அந்தப் படகோட்டி, மேங்குரோவ் மரங்களின் அறிவியல் பெயரைக் கூறிய போது, நான் ஒரு கணம் வாயடைத்துப் போனேன் - நானே பள்ளியில் படித்து மறந்து போன இப்பெயரை படிப்பறிவில்லாத இவர் இவ்வளவு அழகாகச் சொல்கிறாரே என்று. பின்னர் தான் தெரிந்தது, இப்பெயரை அங்குள்ள படகோட்டிகள் யாவரும் சொல்வார்கள் என்று. கடலூர் மாவட்டம் பிச்சாவரம் சதுப்புநிலப் பகுதி, கோடை வெயிலைத் தணிக்கும் ஒரு இனிய மாலைப் பொழுது அனுபவமாகவே அமைந்தது.  சிறு வயதில் பள்ளிக்கூடத்தில் எட்டாம் வகுப்பு படித்த போது, தாவரவியல் பாடத்தில் சுவாசிக்கும் வேர்கள் (Respiratory Roots) பற்றி படித்தது நன்றாக நினைவிலிருக்கிறது. சதுப்பு நிலப்பகுதிகளில் வளரும் மேங்குரோவ் மரங்கள், தண்ணீர் பரப்புக்கு மேல் விரல்களைப் போல நீட்டிக் கொண்டிருக்கும் வேர்களைக் கொண்டவை. அவ்வேர்களில் தான் அம்மரங்கள் சுவாசிப்பதற்கான துவாரங்கள் அமைந்துள்ளன. பக்கவாட்டில் …

அனுபவம், பொது »

[10 May 2006 | 4 Comments | 2 views]

எல்லோருக்கும் நேராக வைத்த மையை எனக்கு மட்டும் கோணலாக வைத்து விட்டார்களே என்று தேர்தல் மைய அதிகாரி மீது எனக்கு கொஞ்சம் கோபம் இருந்தது. அதிலும் என் என் நடுவிரலில் வேறு சிறு சிந்தல். அப்புறம், என் அலுவலக நண்பரின் விரலைப் பார்த்த பின்பு தான் எனக்கு ஆறுதல். அவர் கை முழுவதும் ஒரு மினி கோலமே போட்டுவிட்டிருந்தார்கள் தேர்தல் மைய அதிகாரிகள். முதல் முதலாக வாக்களித்ததில் மிகுந்த மகிழ்ச்சி ­– ஏதோ இந்தியாவிற்கே ஜனாதிபதி ஆகிவிட்டது போல. அலுவலகத்தில் நண்பர்கள் பலரும் முதல் முறையாக வாக்களிக்கிறவர்கள் என்பதால், எல்லாருக்குமே உற்சாகம். மே 8-ஆம் தேதி முழுக்க ஒரே கொண்டாட்டமாக இருந்தது. விரலை உயர்த்தி அவரவர் கையில் வாங்கிய மையைக் காட்டிப் பெருமைபட்டார்கள். கலைஞருக்கும் ஜெயலலிதாவுக்கும் டென்ஷன் இருக்கிறதோ இல்லையோ – எங்களுக்கு இருக்கிறது – …

அனுபவம், பொது »

[31 May 2005 | 9 Comments | 57 views]

பின்புறத்தில் சற்றே பெருத்து, கிக் ஸ்டார்ட் செய்யப்படும் ஒரு மாதிரியான ஆட்டோக்களை என் சொந்த ஊரில் தான் பார்த்திருக்கிறேன். கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தில் ஒரு சின்ன கிராமம், பெயர் 'கொப்பா'. Michael Crichton-னின் State of Fear-இல் எவ்வளவு தான் இயற்கையைத் திட்டி, கன்னாபின்னாவென்று விமர்சித்திருந்தாலும், நாலாபுறமும் மலைகள் மலைகள் என்று இருக்கிற ஊரைப் பார்க்கும் போது, மனம் அதில் லயித்து விடுவதில் ஆச்சரியமில்லை. முணுமுணுப்பது போல் வேகமாகப் பேசுகிற மைசூர் கன்னடம், மணிரத்தினம் பட வசனம் போல அவ்வளவு ஸ்பஷ்டமாகப் புரியாவிட்டாலும், சென்னை செந்தமிழைக் கொஞ்ச நாள் மறக்கடித்து விட்டதென்னவோ உண்மைதான்.  மலையிலிருந்து பொங்கிவரும் ஓடை நீரில் குளித்த போது, அங்கே மரநிழலில் ஊஞ்சல் கட்டி ஆடிய சிறுவர்கள் இன்னும் என் கண்களில் நிற்கிறார்கள். என் சிறுவயதில் இப்படியெல்லாம் ஓடைப்புறத்தில் விளையாட வாய்த்ததில்லையே என்ற …

அனுபவம், பொது »

[8 May 2005 | 12 Comments | 4 views]

கடைசியில் ஒரு வழியாக, என்னுடைய கல்லூரி வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது. மிகுந்த ஆரவாரம், மேளதாளம், பாராட்டுகள், பரிசுகள், கூத்து, பாட்டு என்று கல்லூரியே அமர்க்களப்பட்டு விட்டது என்று சொன்னால், அது சத்தியமாகப் பொய்தான். நான்கு ஆண்டுகளில் இதுவரை எழுதிய அறுபது பேப்பர்களில், கட்டக்கடைசியான பேப்பரை முடித்த நிறைவோடு, அதன் சாதக-பாதகங்களை டிஸ்கஸ் செய்துகொண்டே, நண்ப-நண்பிகளுக்கு டாட்டா காட்டிவிட்டு, வீட்டுக்கு வந்தாகிவிட்டது. ஸ்ட்யூடண்ட் வாழ்க்கையிலிருந்து, க்ராஜுவேட் வாழ்க்கைக்கு இப்பொழுதுதான் ப்ரொமோட் ஆகியிருக்கிறதால், இந்தப் புதிய அவதாரத்தின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடுகள் இன்னும் பிடிபட்டபாடில்லை. காலை வேளை ‘கொக்கரக்கோ’கள் காதில் விழ வாய்ப்பு தராமல் தூங்குகிற காரியத்தை எத்தனை நாள் செய்துகொண்டிருக்க முடியும்? நண்பர்களிடம், “உருப்படியா என்னடா செய்றதா உத்தேசம்?” என்று கேட்டு, “இனிமேல் தான்டா யோசிக்கணும்”, என்பதையே எல்லோரிடமும் நித்தியமான பதிலாகப் பெற்று பெற்று அலுத்தாகிவிட்டது. …