Amusingly Simple

A blog by Deepak Venkatesan

Archive for August, 2005

புதுமலர்ச்சி

one comment

வெகு நாள் கழித்து மீண்டும் வலைபதிக்கிறேன். என் வலைப்பதிவைப் படித்து ஊக்கப் படுத்திய அன்பர்களுக்கும், என் இனிய நண்பர்களுக்கும் மிக்க நன்றி. இனியும் தொடர்ந்து இங்கே எழுத விரும்பி, காற்று வெளியிடை, என் எண்ணத் தீற்றல்களுக்கு மீண்டும் புதுமலர்ச்சி அளிக்கிறேன். Orkut நண்பர்கள் இணையத்தளம் வழி அறிமுகமான என் இனிய நண்பர் பிரதீப் (Cognizant) அவர்களின் ஆங்கில வலைப்பதிவுக்கு என் வாழ்த்துகள். தனது நண்பர்கள் தினப் பதிவில் ஒரு இன்ப அதிர்ச்சியாக என் பெயரையும், என் வலைப்பதிவு முகவரியையும் இணைத்த அன்பிற்குரிய தோழி விஜிக்கு மிக்க நன்றி. அண்மையில் படித்த கவிஞர் வைரமுத்து அவர்களின் "கொஞ்சம் தேநீர், நிறைய வானம்" (திருமகள் நிலையம்) என்ற புத்தகத்தில், தேநீர் பற்றி அவர் எழுதியிருந்த "ஆளுக்கொரு கோப்பை" என்ற கவிதை, தேநீர் போலவே சுவையாய் கதகதப்பய் இருந்தது… தேநீர் பருகும் நிமிடங்கள் சிலநிமிடத் திருவிழாக்கள் தேநீர்க்கோப்பை ஒரு கையடக்க சன்னிதானம் கூப்பிட்டபோது வரம்தந்தோடிப்போகும் மலிவு தெய்வம் தேநீர் உதடுகளில் சூடுகொளுத்தி கதகதப்பாய் நவுதடவி சுவையரும்புகள் ஒவ்வொன்றாய்த் தொட்டெழுப்பி இனிப்பு கடந்தொரு துவர்ப்பு பரப்பி தொண்டையில் நழுவும்போதே ரத்தக் குழாய்கள் புடைக்க மலர்த்தி இருதயத்தின் உணர்ச்சிமயமான பிரதேசத்தை முறைப்பெண்ணின் முந்தானைப்போல் சிருங்காரமாய் உரசி குடலில் விழுந்த மறுகணம் மூளையின் திரிகளில் அது சுடர்கொளுத்தும் போது மோட்சத்தின் பக்கத்து வீதிவரை சென்று திரும்பும் ஜீவாத்மா. – கவிஞர் வைரமுத்து வலைப்பதிவிற்குப் புதுமலர்ச்சி கொடுத்த கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு நன்றி! :) மீண்டும் சந்திக்கிறேன்…

Related Posts with Thumbnails

Written by Deepak

August 16th, 2005 at 10:41 pm