Amusingly Simple

A blog by Deepak Venkatesan

Archive for March, 2005

அன்புள்ள நண்பர்களே!

7 comments

நானும் எத்தனையோ தடவ blog பண்ண முயற்சி செஞ்சி, அப்றம் இதெல்லாம் நமக்கு ஒத்து வராதுன்னு முடிவு பண்ணி அப்டியே விட்டிருக்கேன். ஆனால் தமிழ்ல blog பண்ண ஆரம்பிச்சப்றம் தான் தொடர்ந்து எழுதலாமேன்னு தோண்றது. நினைக்க்ற விஷயத்த அப்டியே சொல்ல தமிழ்ல தான் முடிது. புதுசு புதுசா எழுத matter கிடைக்குது. எனக்கு எழுதணும்ங்க்ற ஆசையும் பூர்த்தி ஆகுது. இதை யார் படிக்றாங்க்ளோ இல்லையோ, நான் எழுதுறதுல எனக்கு ஒரு சந்தோஷம். நிச்சயமா தொடர்ந்து எழுதுவேன். local matter-லேர்ந்து சர்வதேச பயங்கரவாதம் வரைக்கும் எல்லாமே எழுதலாம். நான் எழுதணும்னு நெனச்சு எழுதாம விட்ட கதை, கவிதை, எல்லாமே எழுதலாம். தமிழ் Unicode கோடிங் முறைக்கு ஒரு ஓ!!! போடலாம். அதுலையும், phonetic கீபோர்டு யூஸ் பண்றது, இதுக்கு முன்னால நான் யூஸ் பண்ணிட்டிருந்த தமிழ் typewriter கீபோர்டை விட சூப்பரா இருக்கு. ஈசியா எழுத முடிது. இத்தனை நாளா இது தெரியாம போச்சேன்னு வருத்தமா இருக்கு. Anyway, இனி என்றுமே வெற்றி தான். வாழ்க தமிழ்! வாழ்க யூனிகோடு!!

Written by Deepak

March 9th, 2005 at 7:07 pm

“டேய், கையை வச்சிக்கிட்டு – சும்மா இருடா”

2 comments

கண்ணதாசன் இன்று இருந்தால் கண்ணீர்தாசன் ஆகியிருப்பார். இன்றைய சினிமாப் பாடல்கள் (?), பாடல்கள் என்கிற status-இலிருந்து இறங்கி, கதாநாயகன், கதாநாயகியின் காம லீலைகளில் இடம்பெறும் முணுமுணுப்புகளாக மாறி வருகிறது. இது வரவேற்கத்தக்கதா இல்லையா என்பதை விடுங்கள். கவிஞர்களின் கற்பனை வறண்டு விட்டதா, அல்லது அஷ்டகோணத்தில் வளர்ந்து விட்டதா என்பது தான் புரியாத புதிராய் உள்ளது. பாடல்களில் இருந்த அந்த சூட்சமம், நெளிவு எல்லாம் மாறி, ஒரேடியாக வெடித்துச்சிதறும் உணர்ச்சிக் கொப்பளங்களாகி விட்டன என்றுதான் கருதத் தோன்றுகிறது. இங்கே ஒரு லிஸ்டே கொடுக்கலாம்.

சமீபத்தில் கேட்ட ஒரு பாட்டு, “திருட்டு ராஸ்கல், திருட்டு ராஸ்கல், திருடவாயேன்டா” என்பது. கவிஞர்களுக்கு எப்படித்தான் கற்பனை நீரோடை இப்படியெல்லாம் வளைந்து ஓடுகிறது என்றே புரியவில்லை. அன்றாடம் மச்சான்க்ள் பேசிக்கொள்ளும் வார்த்தைகள் எல்லாம் பாடல் வரிகளாகின்றன என்பதில் அவர்களுக்கு மகிழ்ச்சியோ என்னவோ தெரியவில்லை.

இன்னும், கவிஞர்களின் காம profile-இல் சேர்க்க வேண்டியவை எத்தனையோ. குறுக்கு சிறுத்த modern யுவதி, இடுப்போரம் மச்சம் காட்டவா என்று public-ஆக மச்சானிடம் கேட்பது எங்காவது நடக்குமா? (அந்த பாடலின் மற்ற வரிகளைப் பற்றி கேட்காதீர்கள்). The degree of raunchiness in Tamil movie songs has grown up to irritating heights in the recent years என்று தான் சொல்ல வேண்டும். நம்மோடு சேர்ந்து ஆடுவதற்கு என்றே ஒரு சில மாதுகள் தமிழ்நாட்டில் எங்கேனும் கிடைக்கிறார்களா என்று தெரியவில்லை. திரையில் மட்டும் மலிந்து இருக்கிறார்கள். இவர்களில் மே மாதம் 98-இல் மேஜர் ஆனவர்கள் இருக்கிறார்கள், அத்தை பெற்ற தத்தைகள் இருக்கிறார்கள், ‘சீனா தானா’ என்று ஆடிக்களிக்கிறார்கள், சரக்கு வச்சிருக்கேன் என்று clue கொடுக்கிறார்கள், கட்டிப்புடிடா என்று உரிமையோடு கேட்கிறார்கள், சின்ன வீடாய் வர ரெடியாக இருக்கிறார்கள், இன்னும் என்னென்னவோ…

மார்ச் 8 உலக மகளிர் தினம் என்கிறோம், பேரணி நடத்துகிறோம், பேட்டி அளிக்கிறோம், முகப்புக் கட்டுரை எழுதுகிறோம், சிறப்பு மலர் வெளியிடுகிறோம், அறிக்கை கொடுக்கிறோம், அரசாணை பிறப்பிக்கிறோம்… ஆனால் 21-ஆம் நூற்றாண்டிலும், பெண்ணைப் போகப் பொருளாகவே வைத்துக் கொண்டு பம்மாத்து காட்டுகிறோம். 33-க்காக அவர்கள் இன்னும் இரந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குத் தெரியவில்லை, இட ஒதுக்கீடு செய்ய நாம் யார்? -என்று. குடும்பத்தில் இன்றும் பெண்ணுக்கு முடிவெடுக்கும் அதிகாரம் இல்லை. தன் வாழ்க்கையைத் தீர்மானிக்கிற துணிச்சல் இல்லை.

ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் எத்தனை நாட்கள் தான் பெண் மறைந்து இருந்து வாழ்வாள்? பெண்ணுக்கு வெற்றி எப்போது? அடிப்படையிலேயே கோளாறு இருக்கிறது. அது மாறும் வரை, ‘அழகா இருக்காங்க’ என்று சொல்லி தலையில் மிளகாய் அரைத்துப் பணம் பார்ர்க்கும் கூட்டம் அடங்காமல் அட்டகாசித்துக் கொண்டுதான் இருக்கும்.

Written by Deepak

March 9th, 2005 at 2:35 pm

சந்திரமுகி – தலிவர் படம் வெற்றி பெறுகவே!!!

one comment

என்னுடைய முந்தைய வலைப்பதிவை எழுதும் போதே சந்திரமுகி படத்தின் Audio ரிலீஸ் ஆகிவிட்டிருந்தது. படம் ரிலீஸ் ஆகிற நாளன்றே கடைக்கு ஓடி Cassette/CD வாங்கிக் கேட்கும் பழக்கம் எனகில்லை. நண்பர்களின் comments என்னவென்று தெரிந்து, ரேடியோ மிர்ச்சியில் பாட்டைக் கேட்டு பரவசப்படும் ரகம் நான். நண்பர் கதிர் எனக்கு அனுப்பியருந்த SMS திரைப்பாடல் விமர்சனம் மிகுந்த எதிர்பார்ப்புகளை உண்டாக்கி உள்ளது. பாடல்கள் நன்றாக இருப்பதாக எழுதியிருந்தார். சந்திரமுகி வெற்றி பெற என் வாழ்த்துகள்.

என்னதான் மணிரத்னத்தின் Intellingent சினிமாவைப் பார்த்து வியந்தாலும், நண்பர்களோடு பேசும்போது hero worship-பைச் சகட்டுமேனிக்கு இடித்துத் தள்ளினாலும், Shayamalanனின் ஹாலிவுட் சாகசங்கள் பற்றிப் பெருமையடித்துக் கொண்டாலும், சூபர் ஸ்டார் படம் ரிலீஸ் ஆகிறது என்றால், அதில் என்றுமே ஒரு தனி kick உண்டு. யாருக்குமே இல்லாத ஒரு காந்த சக்தி ரஜினிகாந்த்திடம் இருக்கிறது. குழந்தைகள் முதல் கிழவர்கள் வரை, ரஜினிகாந்த் என்றால் சூபர் ஸ்டார் தான். நம்மையும் அறியாமல், நம் rational thinking-கைத் தூக்கி எறிந்து, இரண்டு மணி நேரத்திற்கு நம்மை mesmerise செய்கிற ஆற்றல் பெற்றவர் அவர்.

சூபர் ஸ்டார் கொஞ்சம் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டிருந்தால் இம்முறை எளிதாக ‘சந்திரமுகி’ ஒரு போடு போடும். ஆட்டோகிராஃப், மன்மதன் என்று மரபு மீறிய New Age சினிமா பிரபலமாகியிருக்கும் இந்நாளில், சூபர் ஸ்டார் தம்முடைய மரபை மீறி வித்தியாசமான கதையைக் கொடுத்துள்ளார் என்று நம்புவோம். காணும் வரைக் காத்திருப்போம்.

Related Posts with Thumbnails

Written by Deepak

March 9th, 2005 at 1:27 pm

Posted in பொது