SSN கல்லூரியில் இந்த ஆண்டு முதல் முறையாக Cognizant Training-ஐ, கல்லூரி முடியும் முன்னரே தொடங்கி விட்டார்கள். காலை முதல் மாலை வரை கல்லூரி ஆசிரியர்களின் Lecture-களைக் கேட்டுக் கொண்டிருப்பது ஏதோ தண்டனை மாதிரி தான் இருந்தது.
கடைசி நாளன்று, ஒருவர் Data Mining மற்றும் Data Warehousing பற்றிக் கூற வந்தார். Data Mining என்பது செய்தித் தொகுப்புகளில் (Database) உள்ள pattern-களைப் பார்த்து, கணினியில் நாம் உள்ளீடு செய்த program, எதிர்காலத்தில் system எவ்வறு இருக்கும், எவ்வாறு செயல்படும் என்பதைக் கணிப்பதுதான் என்கிற விஷயத்தை முன்வைத்தார்.
அதற்காக அவர் எடுத்துக்காட்டு கூறும் போது, ‘சந்த்திரமுகி’ திரைப்படம் ரிலீஸ் ஆகிற நாளன்று, வகுப்பின் attendance-இல் 20 சதவிகிதம் குறைந்து இருக்கும் என்று இதனால் கணிக்க முடியும். ஏனென்றால், ‘பாபா’ திரைப்படமும் ‘படையப்பா’ திரைப்படமும் ரிலீஸ் ஆன போது இது தான் நடந்தது. அதை வைத்து, கணினி சரியாகக் கணித்து விடும் என்றார். அவர் சொன்னது சாதாரண எடுத்துக்காட்டு தான். ஆனால், பாட விஷயத்தில் practical எடுத்துக்காட்டுகளைக் கூறி, real life பிரச்சனைகளுக்குத் தீர்வு காணக் கணினியைப் பயன் படுத்தும் நுட்பத்தையே அவர் விளக்கினார் என்பது என் அபிப்ராயம்.
அன்று அவரின் Lecture முழுவதையும் கேட்ட பிறகு, கடமைக்காக ஒரு சுவாரஸ்யமும் இன்றி prepare செய்து வரும் Lecturer-களுக்கு நடுவே, அவர் ஒரு விதிவிலக்காகத் தோன்றினார்.




