Amusingly Simple

A blog by Deepak Venkatesan

முதல் முதலாய்!

leave a comment

அனைவருக்கும் வணக்கம்.

எத்தனையோ முறை இணையத்தில் நீந்திய போதெல்லாம், நமது கருதுக்களைத் தமிழில் கூற முடிந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்துக் கொண்டது உண்டு. யூனிகோடு (Unicode) முறையைப் பயன்படுத்தி, தமிழ் வழியாக அருமையான வலைப் பக்கங்களை இயற்றலாம் என்ற செய்தி, காதில் தேன் போலப் பாய்கிறது.

இணையத் தமிழ் இன்னும் பல சிகரங்களைத் தாண்டி, இமயத் தமிழாக இருமாந்து நிற்க்கும் என நம்புவோம். நம்மால் இயன்றதைச் சிறப்பாய்ச் செய்வோம்.

இந்த வலைப் பக்கத்தில், நான் பார்த்த, பழகிய, கேட்ட, இரசித்த, உருசித்த, கண்டு களிப்புற்ற – சிலப் பல செய்திகளையும் செய்திச் சிதறல்களையும் இடம் பெறச் செய்வதில் ஆயத்தமாய் உள்ளேன்.

உங்களின் ஆதரவுடன்,
தீபக் வெங்கடேசன்

Related Posts with Thumbnails

Written by Deepak

March 7th, 2005 at 11:41 pm

Posted in பொது

Leave a Reply